குளோனிங் முறையில் உருவான உலகின் முதல் ஓநாய்!
குளோனிங் முறையில் பூனை, எலி, நாய், குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள் உருவாக்கப்பட்டன
பல நாடுகளில் மனிதர்களை குளோனிங் முறையி உருவாக்க தடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது
சீன நிறுவனம் ஒன்று உலகின் முதல் குளோனிங் ஓநாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
குளோனிங் தொழில்நுட்பம் என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றோரு உயிரை உருவாக்குவதாகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கலவி இல்லாமல் உருவாக்கப்படும் உயிர்கள் உருவாக்கப்படும்.
செம்மறி ஆடு தான் உலகில் முதன் முதலாக குளோனிங் செய்யப்பட்ட உயிரினம் ஆகும். இந்த நிலையில் பெய்ஜிங் ஆய்வகத்தில் குளோனிங் முறையில் ஓநாய் ஒன்று பிறந்தது.
இதுதான் உலகின் முதல் குளோனிங் ஓநாய் ஆகும். சினோஜீன் பயோடெக்னலாஜி என்ற சீன நிறுவனம் இதனை உருவாக்கியது. கடந்த சூன் 10ஆம் திகதி பிறந்த இந்த ஓநாய், 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆர்டிக் ஓநாயை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள சினோஜீன் நிறுவனம் மாயா என பெயரிட்டுள்ளது. மாயா ஓநாய் தற்போது தனது மாற்று பீகிளுடன் ஆய்வகத்தில் வசிக்கிறது.
Sinogene Biotechnology Co
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் போலார்லேண்டுக்கு அனுப்பப்பட உள்ள மாயா, அங்கு மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
இந்த தொழில்நுட்பம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அழிந்து வரும் மற்றும் அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.