உலகின் விலை உயர்ந்த பசு இதுதான் - சுவாரஸ்ய பின்னணி
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 'வியாத்தீனா-19' என்ற பசு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பசு என்ற பெருமையை பெற்றுள்ளது.
வியாத்தீனா-19
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பசு என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இந்த பசு இடம்பெற்றுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், இந்த பசுவின் மூன்றில் ஒரு பங்கு உரிமை மட்டும் சுமார் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

இதன் அடிப்படையில் இந்த பசுவின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 40 கோடி. இது இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்ட 'நெலூர்' வகை மாடுகளைச் சார்ந்தது. வெப்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.
கின்னஸ் உலக சாதனை
இதன் மூலம் பிறக்கும் கன்றுகள் உயர்தரமான இறைச்சி மற்றும் வலிமையான உடல்வாகைக் கொண்டிருக்கும். இந்தப் பசுவின் கருமுட்டைகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 1100 கிலோ எடை கொண்ட இந்த பசு சராசரி பசுக்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

அதிக விலை காரணமாக பசுவிற்கு 24 மணிநேர ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு தனிப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் பராமரிப்புக் குழு உள்ளது. இதன் மதிப்பு மற்றும் சிறப்பம்சங்கள் ஒரு சொகுசு பங்களாவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.