ரூ.3000 கோடி.., உலகிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்: எது தெரியுமா?
இதுவரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் விலை உயர்ந்த படம் என்றால் அது தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்(The Force Awaken) திரைப்படம் தான்.
அதாவது, ரூ.3000 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் தான் இந்த தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்(The Force Awakens).
அதே போல் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ 13000 கோடி வசூல் செய்தது. மேலும், 5 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்காளாக கருத்தப்படட்ட படங்களையும் இந்த படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
அதாவது, கல்கி (ரூ. 600 கோடி), RRR (ரூ.550 கோடி), ஆதிபுருஷ் (ரூ. 500 கோடி), ஜவான் (ரூ. 300 கோடி), பதான் (ரூ. 250 கோடி), மற்றும் அனிமல் (ரூ. 100 கோடி) இந்த அனைத்து படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் கூட வெறும் ரூ. 2300 கோடி தான் வருகிறது.
ஆனால் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்(The Force Awakens) படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டு பார்த்தல், இன்னும் ரூ.700 கோடி குறைவாகதான் உள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட் படமான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வசூலை மொத்தமாக சேர்த்தால் ரூ. 2400 கோடி வருகிறது, அதனோடு ஒப்பிட்டாலும் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தின் பட்ஜெட்டான ரூ. 3000 கோடியை எட்டவில்லை.
பட்ஜெட்டில் மட்டுமல்ல, அதிக வசூல் செய்த இந்திய படங்களின் மொத்த வசூலும், தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தின் தயாரிப்பு செலவைவிட குறைவுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |