உலகின் ‘அரிய’ Apple IPhone: ரூ.63.92 லட்சத்துக்கு விற்பனை!
யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய உலகின் ‘அரிய’ ஆப்பிள் ஐபோன் ரூ.63.92 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆப்பிள் சாக்கெட்டுக்கு பதிலாக USB Type-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருப்பதால் மிகவும் அரிதான ஐபோன்களில் ஒன்று, eBay-ல் ஏலத்தில் விடப்பட்டது.
ஒரு பொறியியல் மாணவர் மற்றும் ஆர்வலரின் தனித்துவமான இந்த முயற்சியால், ஒரு iPhone X போன் USB-C போர்டை கொண்ட உலகின் ஒரே அறியப்பட்ட iPhone என்ற பெருமையை பெற்றது.
இந்த போன் ரூ. 63.92 லட்சத்திற்கு ($86,001) ஏலத்தில் விற்கப்பட்டது.
யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட உலகின் ஒரே ஆப்பிள் ஐபோனின் ஏலம் நவம்பர் 1-ஆம் திகதி நேரலைக்கு வந்தது. இதன் விலை சுமார் 1,625 டொலரில் இருந்து தொடங்கி 100,000 டொலர் வரை உயர்ந்தது.
வியாழக்கிழமை (நவம்பர் 11) இரவு 9:30 மணிக்கு ஏலம் நிறைவடைந்தது. இறுதியில் 86,001 டொலருக்கு (ரூ. 63.92 லட்சம்) போன் விற்கப்பட்டது.
சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ரோபாட்டிக்ஸில் முதுகலைப் படிக்கும் ரோபாட்டிக்ஸ் மாணவர் கென் பில்லோனெல் (Ken Pillonel) என்பவரே இந்த ஐபோனை மாற்றி உருவாக்கியவர்.
கடந்த மாதம் ஒரு வீடியோவில், யூ.எஸ்.பி டைப்-சிக்கு ஆப்பிள் லைட்னிங் கனெக்டரை மாற்றிய மாற்றத்தை அவர் காட்சிப்படுத்தியிருந்தார். மாற்றியமைக்கப்பட்ட ஐபோன் சார்ஜிங் மற்றும் தரவு பரிமாற்றத்தை ஆதரிக்கிறது என்று அவர் கூறுகிறார்.