உலகின் முதற்தர பணக்காரராக தடம் பதித்த எலன் மஸ்க் எடுத்துள்ள முடிவு
ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்பும் நிறுவனத்தினையும், டெஸ்லா எனப்படும் இலத்திரனியல் வாகன உற்பத்தி நிறுவனத்தினையும் ஒருங்கே நடாத்தி வருபவர் எலன் மஸ்க்.
இவர் சில வாரங்களுக்கு முன்னனர் உலகின் முதலாவது பணக்காரர் எனும் அந்தஸ்தினை பெற்றார்.
எனினும் இது சில தினங்கள் மாத்திரமே நீடித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
இப்படியிருக்கையில் கார்பனை குறைக்கும் சிறந்த திட்டத்திற்காக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
உலக அளவில் கார்பன் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதனால் ஏற்படவுள்ள விபரீதங்களை தடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்களும், அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்படியான நிலையிலேய எலன் மஸ்க் இப் புதிய யோசனையை முன் வைத்துள்ளார்.
அதாவது கார்பனை குறைக்கும் சிறந்த திட்டத்திற்கு 100 மில்லியன் டொலர்களை பரிசாக வழங்க முன்வந்துள்ளார்.
இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் ஊடாக அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.