உலகின் இளம் வயது பணக்காரர்கள் யாரென்று தெரியுமா? வெற்றி ரகசியம் மற்றும் சொத்துமதிப்பு இதோ!
பல கோடிகளில் புரளும் உலகின் இளம் பணக்காரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் Forbes தரவுகளின் படி இந்த செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
உலகின் இளம் வயது பணக்காரர்கள்
உலகில் காணப்படும் செல்வந்தவர்களில் பலர் தன்னுடைய அல்லது தன்னுடைய முன்னோர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் விளைவாக உச்சம் தொட்டு ஜொலித்து வருகின்றனர்.
அவர்களில் இளம் தலைமுறையினரை குறித்து நாம் தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியமானது.
1.Clemente Del Vecchio, 2.Kim Jung-youn, 3.Kevin David Lehmann
அந்த வகையில் 2024 ஜனவரி 30 திகதி வரையிலான Forbes-யின் சொத்து தரவுகளின் அடிப்படையில் பல பில்லியன் டொலர் பணத்தில் மிதந்து வரும் உலகின் இளம் தலைமுறை பணக்காரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
கிளெமென்டே டெல் வெச்சியோ(19)
கிளெமென்டே டெல் வெச்சியோ(Clemente Del Vecchio) மறைந்த லியோனார்டோ டெல் வெச்சியோவின்(Leonardo Del Vecchio) மகன் ஆவார்.
லியோனார்டோ டெல் வெச்சியோ 2022ல் இறப்பதற்கு முன்பு வரை EssilorLuxottica நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார்.
EssilorLuxottica நிறுவனத்தில் கண் லென்சுகள், கண்ணாடிகள் மற்றும் சன்கிளாஸ்களை வடிவமைத்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
19 வயதுடைய கிளெமென்டேவின் சொத்து மதிப்பு $4.1 பில்லியன் டொலராகும்.
கிம் ஜங்-யூன்(20) மற்றும் சகோதரி கிம் ஜங்-மின்(22)
கிம் ஜங்-யூன்(Kim Jung-youn) மற்றும் மூத்த சகோதரி கிம் ஜங்-மின்(Kim Jung-min) NXC நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டு தளமான நெக்ஸனில்(Nexon) மிகப்பெரிய பங்குதாரராக உள்ளனர்.
பல மில்லியன் அமெரிக்க ஊதியத்தை உதறிவிட்டு.,ரூ.2000 கோடி விவசாய நிறுவனத்தை கட்டியெழுப்பிய இந்திய இளைஞர்
இவர்களது சொத்துமதிப்பு சுமார் $1.7 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
கெவின் டேவிட் லெஹ்மான்(21)
கெவின் டேவிட் லெஹ்மான்(Kevin David Lehmann) ஆண்டுக்கு $14 பில்லியன் வருமானத்தை ஈட்டும் drogerie markt என்ற ஜெர்மன் மருந்து நிறுவனத்தின் 50 சதவீத உரிமத்தை கொண்டுள்ளார்.
கெவினின் தந்தை Guenther 1974ம் ஆண்டு drogerie markt நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
2017ம் ஆண்டு 50 சதவீத முதலீடுகள் கெவினின் பெயருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
21 வயது கெவின் டேவிட் லெஹ்மான் சொத்துமதிப்பு சுமார் $2.5 பில்லியன் டொலராகும்.
லூகா டெல் வெச்சியோ(22)
கிளெமென்டேவின் சகோதரான லூகா(Luca Del Vecchio) அவரது தந்தையின் மறைவுக்கு பிறகு லக்சம்பேர்க்கை(Luxembourg) தளமாக கொண்ட டெல்ஃபின்(Delfin) நிறுவனத்தில் 12.5சதவீத பங்குகளை பெற்றார்.
22 வயதான லூகா டெல் வெச்சியோ சொத்துமதிப்பு $4.1 பில்லியன் டொலராகும்.
அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரேசன்(27)
அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரேசன்(Alexandra Andresen) மற்றும் அவரது மூத்த சகோதரி கத்ரீனா(Katharina) தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான Ferd-ல் 42 சதவீத பங்குகளை கொண்டுள்ளனர்.
27 வயதான அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரேசன் சொத்துமதிப்பு $1.5 பில்லியன் டொலராகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
world's young richest person's success stories and asset details in tamil, businessman success stories, money, rich persons, how to make money