லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்!
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.
வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.
நரசிம்மரை வழிபட்டால் நம் வீட்டின் கஷ்டங்கள் அனைத்து நீங்கி நன்மைகள் வந்து சேரும்.
கோவையில் எழுந்தறியுள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நீண்ட நாட்கள் உள்ள கடன் தொல்லை நீங்கும், திருமணம் கைக்கூடி வரும், குழந்தை வரம் கிட்டும்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ஆலயம் உள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் கால மாற்றத்தினால் அழிந்துவிட்டது.
5 வருடத்துக்கு முன்பு அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர். கோவிலுக்கு நேரெதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் ஒன்று உள்ளது.
இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார். லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே சென்றது.
திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை மரத்தை சுற்றி வந்து பக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள் .
பக்தர்கள் இங்கு தொழில் விருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |