நவராத்திரி ஆறாவது நாள்! எப்படி வழிபட்டால் செல்வத்தை அடையலாம்?
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். இன்று நவராத்திரியின் ஆறாவது நாளாகும்.
நாம் வழிபட வேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள்.
இன்று தேவியை எப்படி வழிபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி வழிபட வேண்டும்?
- இன்றைய தினம் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபட வேண்டும்.
- இன்று பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.
- நவராத்திரியின் 6-வது நாளான்று தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.
- அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.
குறிப்பு
வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.