உங்கள் இதயத்திற்கு எதிரிகளாக உள்ள இந்த உணவுகளை தெரியுமா? மீறி சாப்பிட்டு வந்தால் சிக்கல் தான்
இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும். ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் இதயகோளாறுகள் ஏற்படும்.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழப்புகளை சந்திக்கிறார்கள்.
இதயத்திற்கு சில உணவுகள் எதிரிகளாக இருக்கின்றது, அப்பேற்ப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.
சொக்லேட் / மிட்டாய்கள்
நீங்கள் நினைப்பதை விட மிட்டாய்கள் இதயத்துக்கு பாதிப்பை கொடுக்கலாம் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக சர்க்கரை கொண்ட மிட்டாய்களை சாப்பிடுவது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தி அது இதயநோய்க்கு கொண்டு சென்றுவிடும்.
Sugary cereals
சர்க்கரை நிறைந்த இது போன்ற தானியங்கள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை உணராமல், ஒவ்வொரு நாளும் காலை உணவாக பலர் சாப்பிடுகின்றனர். உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரித்து இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சோடா
அடிக்கடி சோடா குடிப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். டயட் சோடா மட்டும் உடலுக்கு சிறந்தது என கருத வேண்டாம். டயட் சோடாக்கள் உங்கள் எடையை அதிகரிக்க செய்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
பீட்சா
பீட்சா இதயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய உணவு பொருளாகவே இருக்கிறது. இதில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் எடை கூடும். நீங்கள் இதை உண்ணும் போது, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு பதிலாக காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கவும்.
பிரஞ்ச் பிரைஸ்
பிரஞ்ச் பிரைஸ் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இருப்பினும் உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அவற்றை சுடவும், வெள்ளை உருளைக்கிழங்கிற்கு பதிலாக இனிப்பு உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.