பிரான்ஸ் ஜனாதிபதிமுன் நீச்சல் வீரருக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலைமை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒலிம்பிக் போட்டிகளுக்காக நீச்சல் குளம் ஒன்றைத் திறந்துவைக்க வந்திருந்த நிலையில், நீச்சல் வீரர் ஒருவர் தர்மசங்கடமான நிலைமை ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தது.
நீச்சல் குளத்தை திறந்துவைக்க வந்திருந்த மேக்ரான்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நீச்சல் போட்டிகளுக்காக, நீச்சல் குளம் ஒன்றைத் திறந்துவைக்க வந்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
அவர் நீச்சல் குளத்தைத் திறந்துவைத்ததும், சில நீச்சல் வீரர்கள் நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க தயாரானார்கள். அவர்களில், இரண்டு முறை சாம்பியன்ஷிப் வென்ற Alexis Jandard என்னும் வீரரும் ஒருவர்.
நீச்சல் குளத்தில் குதிக்கத் தயாரான Alexis Jandard, திடீரென கால் வழுக்கி தண்ணீரில் விழுந்தார். அவர் தண்ணீரில் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், Alexis Jandard தன்னைத்தானே கேலி செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விழுந்ததில் தன் உடலில் ஏற்பட்ட கீறல்களைக் காட்டி, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், பொதுவாக பயிற்சியின்போது இப்படி யாராவது வழுக்கி கீழே விழுவது சகஜம்தான்.
ஆனால், ஜனாதிபதி மேக்ரான் முன்பு, அதுவும் நீச்சல் குளம் திறந்துவைக்கப்படும் அன்றே நான் இப்படி விழுந்தது தர்மசங்கடமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார் Alexis Jandard.
விடயம் என்னவென்றால், பின்னர், ஜனாதிபதி மேக்ரானும், விளையாட்டுத்துறை அமைச்சரான Amelie Oudea-Casteraவும் Alexis Jandardஐ தொலைபேசியில் அழைத்து அவரை நலம் விசாரித்தார்களாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |