பிரித்தானியா மீதான எரிச்சலை வெளிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் செய்த மோசமான செயல்... பொங்கி எழுந்த தலைவர்கள்
பிரெக்சிட் நிகழ்ந்ததால் இன்னமும் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா மீது எரிச்சலில்தான் உள்ளது.
அந்த எரிச்சலை ஏதாவது ஒருவகையில் அதன் தலைவர்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இம்முறை, அதை அயர்லாந்து வழியாக காட்ட முயன்றுள்ளார்கள்.
வட அயர்லாந்து மட்டுமே பிரித்தானியாவின் ஒரு பகுதி என்பதால், அயர்லாந்து குடியரசு வழியாக வட அயர்லாந்துக்குள் நுழையும் தடுப்பூசிகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயன்றுள்ளது.
இந்த சம்பவம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பயங்கர வெறுப்பை வெளிப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை எதிர்த்து, பிரித்தானிய அரசியல்வாதிகள் மட்டுமின்றி அயர்லாந்து தலைவர்களும் குரல் எழுப்பவே, ஐரோப்பிய ஒன்றியம் பின்வாங்கியது.
அதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாக அறிவித்த சில மணி நேரத்திற்குள், கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டது ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பிரித்தானிய மற்றும் அயர்லாந்து தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் சரியான பாடம் கற்றுக்கொண்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.


