22 வயதில் ரூ 1,200 கோடி சொத்து மதிப்பு... இனி ரூ 2.5 லட்சம் கோடி வருவாய்க்கு திட்டமிடும் இளைஞர்
பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்ட இரு இளைஞர்கள், தங்கள் நிறுவனத்தின் வருவாயை அடுத்த 10 ஆண்டுகளில் ரூ 2.5 லட்சம் கோடிக்கு உயர்த்த திட்டமிட்டு வருகின்றனர்.
வீடு தேடிவரும் பொருட்கள்
அமெரிக்காவில் உள்ள புகழ்பூத்த மற்றும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்ட அந்த இளைஞர்கள் யார் என்றால் Aadit Palicha மற்றும் அவரது நெருங்கிய நண்பரான Kaivalya Vohra ஆகியோர்களே.
19 வயதில் Zepto என்ற நிறுவனத்தை தொடங்கிய இருவரும், தங்களின் 22வது வயதில் ரூ 1200 கோடி மற்றும் ரூ 1,000 கோடி சொத்து மதிப்புடன் சமகால இளைஞர்களுக்கு முன்மாதிரியாகினர்.
2021ல் கோவிட் பெருந்தொற்றால் உலக நாடுகள் மொத்தம் முடங்கிக் கிடந்த போது 10 நிமிடங்களில் வீடு தேடிவரும் பொருட்கள் என்ற விளம்பரத்துடன் Zepto நிறுவனத்தை நிறுவினர்.
வருவாய் இன்றி தத்தளித்த நாட்களில் இருந்து, அடுத்த சில மாதங்களில் மில்லியன் கணக்கான டொலர் வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டனர்.
2001-ல் பிறந்த ஆதித் பாலிச்சா பில்லியன் டொலர் மதிப்பிலான இந்திய நிறுவனம் ஒன்றின் இளம் வயது தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
Zepto தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 7400 கோடி என உச்சம் கண்டது. 2023ல் Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ 11,000 கோடிக்கும் அதிகம்.
22 வயதில் பெரும் கோடீஸ்வரர்கள்
அத்துடன் 2022ல் வெளியான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வெறும் 22 வயதில் ரூ 1,200 கோடி சொத்து மதிப்புடன் Aadit Palicha இடம்பெற்றார். அவரது பால்ய நண்பரும் Zepto நிறுவனத்தின் இணை நிறுவனருமான Kaivalya Vohra ரூ 1,000 கோடி சொத்து மதிப்புடன் குறித்த பட்டியலில் முதல்முறையாக இடம் பிடித்தார்.
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் DMart-ஐ விடவும் Zepto நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றனர் நண்பர்கள் இருவரும் தங்கள் நிர்வாகிகளுடன் இணைந்து.
மட்டுமின்றி முறையான திட்டத்துடன் செயல்பட்டால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் Zepto நிறுவனத்தின் வருவாய் என்பது 2.5 லட்சம் கோடிக்கு உயர்த்தலாம் என்றே ஆதித் பாலிச்சா கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மடங்கு வளர்ச்சியை பதிவு செய்தால் Zepto நிறுவனத்தால் சாதிக்கலாம் என்றே ஆதித் பாலிச்சா நம்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |