அன்று போட்டியிட்டிருந்தால் ஆட்சி உறுதி: விஜய் விவகாரத்தில் மனம் திறந்த ரஜினி
தமிழ்நாட்டில் தவெக வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
பரவிய வதந்தி
தொடர்புடைய கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த விரிவான விளக்கமளித்துள்ளார். அத்துடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தாம் உருவாக்க நினைத்தக் கட்சி போட்டியிட்டிருந்தால் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்டாலினை சந்தித்ததால் பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்தார்.
கொளத்தூரில் ஸ்டாலினின் தோல்வி தனக்கு நெருடலை ஏற்படுத்தியதாகவும் இதன் காரணமாகவே ஸ்டாலினை சந்தித்தாக தெரிவித்தார். மேலும், ஸ்டாலினுக்கும் தனக்கும் மிக நீண்ட நட்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
100 சதவீதம் உறுதி
மேலும், விஜய் மீது தனக்குப் பொறாமை இல்லை என்றும், விஜய் தனியாக வென்றதில் ஆச்சரியம் கலந்த உண்மை என்றும் தெரிவித்தார்.
விஜய் அனைத்து எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வார் என நம்புவதாகவும், விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அது விஜய்யையே பாதிக்கும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2021ல் போட்டியிட்டிருந்தால் வென்று இருப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினி, 100 சதவீதம் உறுதி என்றும், அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வென்றிருப்பேன் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |