தனக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டத்தையே விற்பனை செய்து மாதம் ரூ 40 கோடி சம்பாதிக்கும் நபர்
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான சாலையோர தின்பண்டம் என்றால் அது மோமோஸாகவே இருக்க முடியும்.
மோமோஸ் மட்டுமே விற்பனை
மோமோஸ் மீதான தீராத ஆசையால் கொல்கத்தாவை சேர்ந்த Sagar Daryani என்பவர் தமது வகுப்புத் தோழரும் நண்பருமான Binod Homagai என்பவருடன் இணைந்து மோமோஸ் மட்டுமே விற்பனை செய்யும் குட்டி கடை ஒன்றை திறந்துள்ளார்.
2008ல் கொல்கத்தாவின் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் Sagar Daryani அப்போது இறுதியாண்டு மாணவர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தனது 21வது வயதில் வெறும் 30,000 ரூபாய் முதலீட்டில் Wow Momo என்ற பெயரில் தொடங்கிய ஒரு குட்டி கடை, தற்போது இந்தியா முழுவதும் வியாபித்து ரூ 2,130 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் 26 மாகாணங்களில் 800 கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை 3000 கடைகள் என அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Wow Momo நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Sagar Daryani தெரிவித்திருக்கிறார்.
தினசரி 6 லட்சம் மோமோஸ்
Wow Momo நிறுவனத்தின் 52 சதவிகித உரிமையை இரு நிறுவனர்களும், அதன் ஊழியர்களும் வைத்துள்ளனர். மட்டுமின்றி, Wow Momo நிறுவனத்தின் மாத வருவாய் என்பது தற்போது ரூ 40 கோடியாக அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டு மொத்தமாக ரூ 220 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வெளியான தகவல்களின் அடிப்படையில், Wow Momo நிறுவனம் தினசரி 6 லட்சம் மோமோஸ்களை விற்பனை செய்து வருவதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |