மகளிர் பிரீமியர் லீக்-2025: குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!
இன்று தொடங்கிய இந்தியன் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்
பிசிசிஐ கடந்த 2023ம் ஆண்டு பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் என அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 போட்டியை அறிமுகப்படுத்தியது.
முதல் சீசனில் மும்பை அணியும், இரண்டாவது சீசனில் பெங்களூரு அணியும் சாம்பியன்ஸ் பட்டம் பெற்றன.
Toss News - Captain @mandhana_smriti wins the toss and elects to bowl first in the Season 3 opener 🙌
— Women's Premier League (WPL) (@wplt20) February 14, 2025
Live - https://t.co/33YzQAz1cG… #TATAWPL | #GGvRCB pic.twitter.com/u7Ru7zStR8
இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 3வது சீசன் வதோதரா, கோதம்பி மைதானத்தில் வைத்து இன்று தொடங்கியது.
இதில் நடப்பு சாம்பியன்ஸ் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இமாலய இலக்கு நிர்ணயம்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
6️⃣6️⃣6️⃣ 🚀#GG captain Ashleigh Gardner flexing her muscles with a hat-trick of sixes 💪💥
— Women's Premier League (WPL) (@wplt20) February 14, 2025
She also brings up her FIFTY off just 25 deliveries.
Live 👉 https://t.co/jjI6oXJcBI #TATAWPL | #GGvRCB pic.twitter.com/1bRXNJ3Bep
இதன்படி போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 56 ஓட்டங்களும், ஆஷ்லீ கார்ட்னர் 79 ஓட்டங்களும் குவித்தது அசத்தினர்.
பெங்களூரு அபார வெற்றி
இதையடுத்து வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ஓட்டங்கள் குவித்து வெற்றி வாகை சூடியது.
பெங்களூர் அணியில் எலிஸ் பெர்ரி 54 ஓட்டங்களையும், ரிச்சா கோஷ் 64 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
Game. Set. And Match. 🤌🏻#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2025 #GGvRCB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 14, 2025
pic.twitter.com/FOY1dXEnl9
6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது மூலம் 2025-மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரை பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |