மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலம்: வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!
மும்பையில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இதன்மூலம், ஸ்மிருதி மிகவும் விலை உயர்ந்த WPL வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), இன்று நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
அவர் ரூ.3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் வாங்கப்பட்டார்.
PTI
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்தியாவின் T20I துணைக் கேப்டனான மந்தனாவுக்காக கடுமையான ஏலப் போரில் ஈடுபட்டன, இறுதியில் RCB ஏலத்தை வென்றது.
இதற்கிடையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை (Harmanpreet Kaur) 1.8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன் அணி வாங்கியது.
சக வீரர்கள் கொண்டாட்டம்
Wholesome content alert! ?? The first ever #WPL player @mandhana_smriti and her team-mates reacting to her signing with RCB ? pic.twitter.com/gzRLSllFl2
— JioCinema (@JioCinema) February 13, 2023