மல்யுத்த போட்டியில் தோல்வியடைந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட ரித்திகா போகாட்? அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரபல போகாட் குடும்பத்தைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ரித்திகா இறந்த செய்தியை ஹரியானா பொலிசார் உறுதிப்படுத்தியதோடு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக டிஎஸ்பி ராம் சிங் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் முன்னதாக இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் மார்ச் 15 ஆம் திகதி இரவு 17 வயதான ரித்திகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாரத்பூரில் உள்ள லோகர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துணை ஜூனியர், ஜூனியர் பெண்கள் மற்றும் ஆண்கள் மல்யுத்த போட்டியில் பிரபல போகாட் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது ரித்திகா கலந்து கொண்டார்.
அவர் இறுதிப் போட்டியில் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், பின்னர் தோல்வியால் ஏற்பட்ட மனஉளச்சலை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார் என்று ஹரியானாவின் சார்க்கி தாத்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் சிங் பிஷ்னோய் தெரிவித்தார்.
ரித்திகா மரணத்திற்கு பின்னால் ராஜஸ்தானில் நடந்த மல்யுத்த போட்டியில் அவர் தோல்வியடைந்து காரணமாக இருக்கலாம். விசாரணை நடந்து வருகிறது என்று ராம் சிங் பிஷ்னோய் கூறினார்.
பிரபல இந்திய மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதா போகாட் ஆகியோரின் தாய்வழி சகோதரியான ரித்திகா, துரோணாச்சார்யா விருது பெற்ற மகாவீர் சிங் போகாட்டின் கீழ் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் நடந்த மல்யுத்த போட்டியை மகாவீர் சிங் போகாட்டும் நேரில் கண்டதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் Jhunjhunu-வில் உள்ள ஜெய்த்பூர் கிராமத்தில் வசிக்கும் ரித்திகா, ஹரியானாவில் உள்ள மகாவீர் போகாட் விளையாட்டு அகாடமியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்தத்தை கற்றுக் கொண்டிருந்தார்.
மல்யுத்த வீரரான மகாவீர் போகாட்டின் மூத்த மகள் கீதா மல்யுத்த வீரர் ஆவார், அவர் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக்கிற்கு (2012 லண்டன் விளையாட்டு) தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் ஆவார்.
