மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்தை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்க அணி
மகளிர் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லாரா வோல்வார்ட் அதிரடி
துபாயில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது. லாரா வோல்வார்ட் அதிரடியாக 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அடுத்து வந்த அன்னேக்கே போஸ்ச் 11 ஓட்டங்களில் அவுட் ஆனார். பிரிட்ஸ் 43 (35) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மரிசன்னே கப் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
மரிசன்னே 24 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும், சுனே லூஸ் 18 (13) ஓட்டங்களும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 166 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் மாபா 3 விக்கெட்டுகளும், ட்ரியோன் மற்றும் நாடினே டி க்ளெர்க் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |