74 ரன், 5 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை! இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கைக்கு 316 ரன் இலக்கு
கொழும்பில் நடந்த போட்டியில் மகளிர் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 315 ஓட்டங்கள் குவித்தது.
அன்னெரி டெர்க்சன் 84 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் விளாசினார். அதேபோல் க்ளோ ட்ரையான் 51 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் குவித்தார். தேவ்மி விஹங்கா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் ஹாசினி 30 (26) ஓட்டங்களும், விஷ்மி குணரத்னே 24 (41) ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து ஹர்ஷிதா 38 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் சமரி அதப்பத்து அதிரடியில் மிரட்டினார். 57 பந்துகளை எதிர்கொண்ட சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
க்ளோ ட்ரையான்
பந்துவீச்சில் மிரட்டிய க்ளோ ட்ரையான் இலங்கை அணியை காலி செய்தார். அனுஷ்கா சஞ்சீவனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார்.
𝐓𝐫𝐨𝐮𝐛𝐥𝐞 𝐟𝐨𝐫 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚!
— Female Cricket (@imfemalecricket) May 9, 2025
With Chamari Athapaththu departing after a fluent fifty, they're 161/4 (30.0) in a chase of 316. 🏏#CricketTwitter pic.twitter.com/5lni0p7sn5
இலங்கை அணி 42.5 ஓவர்களுக்கு 239 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
74 ஓட்டங்கள் விளாசியதுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய க்ளோ ட்ரையான் (Chloe Tryon) ஆட்டநாயகி விருது பெற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |