WTC கோப்பையை வென்ற அதே நாளில் சம்பவம்! தென் ஆப்பிரிக்க மகளிர்படையின் தரமான பதிலடி
மகளிர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுனே லூஸ் அரைசதம்
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸில் நேற்று நடந்தது.
The 1st wicket to fall in today's 2nd CG United ODI!💥 #WIWvSAW #FullAhEnergy pic.twitter.com/69N5naG0z6
— Windies Cricket (@windiescricket) June 14, 2025
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்கள் குவித்தது. சுனே லூஸ் (Sune Luus) 65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.
ஷான்காசே 48 பந்துகளில் 55 ஓட்டங்களும், அன்னெரி டெர்க்ஸன் 24 பந்துகளில் 37 ஓட்டங்களும் எடுத்தனர். அஃபி ஃப்ளெட்ஸர் 4 விக்கெட்டுகளும், ஹேலே மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும், கரிஷ்மா மற்றும் ஆலியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஹேலே மேத்யூஸ் விளாசல்
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹேலே மேத்யூஸ் நின்று ஆட, கியானா (17), ரியலியன்னா (15) விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அரைசதம் விளாசிய ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சினில்லே ஹென்றி 39 ஓட்டங்கள் விளாச, ஷெமைனே கேம்பல் அரைசதம் அடித்தார்.
8th 1/2 century in the format for our skipper 👏🏽 #WIWvSAW | #MaroonWarriors | #FullAhEnergy pic.twitter.com/J1ldbef1Wu
— Windies Cricket (@windiescricket) June 14, 2025
ஆனால், மேற்கிந்திய தீவுகள் நொன்குலூலெகோ மாஃபா மற்றும் மரிஸான்னே கப் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் 269 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
[4OHDZK ]
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |