பாகிஸ்தான் மண்ணில் சதம் விளாசிய வீராங்கனைகள்!
தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகளான சுனே லூஸ் மற்றும் மரிசன்னே காப் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசினர்.
முதல் ஒருநாள் போட்டி
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீராங்கனைகள் லௌரா ஒல்வார்ட், டஸ்மின் பிரிட்ஸ் தலா 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.
அடுத்து வந்த லாரா குட்டால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த சுனே லூஸ் - மரிசன்னே காப் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது.
Twitter (@ProteasWomenCSA)
சுனே முதல் சதம்
அதிரடியாக விளையாடிய மரிசன்னே காப் 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இது அவருக்கு 2வது ஒருநாள் சதம் ஆகும்.
பின்னர் சுனே லூஸ் தனது முதலாவது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார். இந்த ஜோடி 183 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
Twitter (@ProteasWomenCSA)
தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்கள் குவித்தது. சுனே லூஸ் 107 (129) ஓட்டங்களுடனும், நாடினே டி கிளெர்க் 29 (23) ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர்.
பாகிஸ்தானின் நஸ்ரா சந்து 2 விக்கெட்டுகளும், அலியா ரியாஸ் மற்றும் உம்மே ஹனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |