முதல் போட்டியிலேயே மரணஅடி கொடுத்த இலங்கை! ருத்ர தாண்டவமாடிய ஹர்ஷிதா
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம்
இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணியின் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டப்லினில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது.
?️ MATCH RESULT?️
— Ireland Women’s Cricket (@IrishWomensCric) August 11, 2024
A well-executed shot finds the boundary...and that's the win.
▪️ Ireland 145-6 (20 overs)
▪️ Sri Lanka 149-3 (16.4 overs)
Sri Lanka won by 7 wickets
SCORE: https://t.co/psgaNAPzqK
MATCH PROGRAMME: https://t.co/sumpTZoVCU#BackingGreen #FuelledByCerta ☘️? pic.twitter.com/7GF5bNbhTF
கேபி லீவிஸ் 39 (33) ஓட்டங்களும், ஒர்லா பிரென்டெர்கஸ்ட் 29 (27) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஹர்ஷிதா மிரட்டல் ஆட்டம்
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 30 ஓட்டங்கள் விளாசி வெளியேற, ஹர்ஷிதா சமரவிக்ரம அதிரடியில் மிரட்டினார்.
கவிஷா (9), அனுஷ்கா (12) விக்கெட்டுகளை இழக்க, ஹர்ஷிதா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் இலங்கை அணி 16.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Harshitha Samarawickrama shines as Sri Lanka beat Ireland in the first T20I ?#IREvSL ?: https://t.co/ajhh98oiEL pic.twitter.com/sqbs561vAG
— ICC (@ICC) August 11, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |