இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணிலேயே மரண அடி கொடுத்த இலங்கை! தொடரை வென்று மிரட்டல்
மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இறுதிப்போட்டி
இலங்கை மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி டெர்பியில் நடந்தது.
Twitter (@englandcricket)
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 116 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக பௌஷிர் 23 (28) ஓட்டங்களும், டேனியில்லே கிப்சன் 21 (15) ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து 3 விக்கெட்டுகளும், உதேஷிகா மற்றும் கவிஷா டில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Reuters
சமரி அதப்பத்து மிரட்டல்
அதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் அதப்பத்து 28 பந்துகளில் 44 ஓட்டங்களும், ஹர்ஷிதா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் வென்றது. இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து பிளேயர் ஆஃப் தி மேட்ச் மற்றும் பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதுகளை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 9ஆம் திகதி நடக்க உள்ளது.
Twitter (@OfficialSLC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |