ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! முதலிடத்தில் இலங்கை அணி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இலங்கை அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நங்கூரம் போட்டு உட்கார்ந்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2021 - 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
2023ம் ஆண்டு ஃபைனல் நடக்கவுள்ளது. தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது.
இந்த நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021 - 23) புள்ளிகள் பட்டியலில் 100% வெற்றி விகிதத்துடன் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கை இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
2ம் இடத்தில் 66.66 வெற்றி சதவிகிதத்துடன் பாகிஸ்தான் அணி உள்ளது. 50 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது.