அஸ்வினின் மேஜிக்கல் பவுலிங்...கோஹ்லியின் செம கேட்ச்! நியூசிலாந்தின் நங்கூரத்தை சாய்த்த வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில், கோஹ்லி பிடித்த கேட்ச் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி கடந்த 18-ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் துவங்கியது.
போட்டி நேற்று முன் தினம் துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தாக, நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 146 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழப்புடன் விளையாடி வந்தது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Magic from Ashwin & Captain Kohli.?? pic.twitter.com/jaP8zYOVkE
— nrcb. (@geniuswithbat) June 20, 2021
இப்போட்டியின் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான நாதன் லாதம் மற்றும் கோன்வே இருவரும் ஒரு நங்கூரம் போல் நின்று சிறப்பாக விளையாடி வந்தனர்.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்களை வீழ்த்த முடியாமல் கோஹ்லி திணறி வந்தார். உடனே கோஹ்லி வேகப்பந்து வீச்சில் எந்த ஒரு பலனும் இல்லை என்று உடனடியாக அஸ்வினை அழைத்து பந்து வீச அழைத்தார்.
முதலில் சில ஓவர்களின் அவரின் பந்து வீச்சில் திணறிய துவக்க வீரர்களில் ஒருவரான டாம் லாதம், அதன் பின் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவருடைய பந்து வீச்சிலே கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Celebrations in the India camp ?#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/lz3ZW0FlND
— ICC (@ICC) June 20, 2021