கமெண்ட்ரியில் பட்டையை கிளப்பும் தினேஷ் கார்த்தி! கொண்டாடும் நெட்டிசன்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரவைக்கும் கமெண்ட்ரி சமூக வலைதங்களில் வைரலாகிவருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட, இன்று போட்டி எந்தவித சிக்கலும் இன்றி தொடங்கியது.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே தினேஷ் கார்த்திக்கின் பெயர் ட்ரெண்டிங்கில் தோன்றியது. ரசிகர்கள் அவரது வர்ணனைக்கு ரசிகர்களாக மாறியதால், சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி பதிவிட தொடங்கினர்.
தினேஷ் கார்த்திக் தனது வர்ணனையால் ரசிகர்களை கவர்ந்ததற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைனுக்கு அளிக்கப்பட்ட கவுண்டர் தான். கிட்டத்தட்ட இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைனை வச்சு செய்திருக்கிறார்.
நேர் எதிரான வீரர் நாசர் ஹுசைனுடன் இணைந்து தினேஷ் கார்த்திக் கமெண்ட்ரி செய்திருக்கிறார். அப்போது நாசர், "ரோஹித் ஷர்மா ஷார்ட் பந்தை அடிப்பதில் சிறந்தவர். சூழலுக்கு எதிராக அவர் தனது கால்களை நன்கு பயன்படுத்துகிறார். இது அவரது நேர்மறையான எண்ணத்தை காட்டுகிறது" என்று சொல்ல, உடனடியாக தினேஷ் கார்த்திக்கோ, "ஆமாம், அப்படியே உங்களுக்கு நேர் எதிரான வீரர்" என்று சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவர் நியூசிலாந்தின் பவுலிங்கை குறிப்பிடும் விதமாக, "2019 உலகக் கோப்பையில், நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், முதல் 6 ஓவரில் எடுத்த ஸ்கோரை விட, இந்திய அணி இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளது" என்று தினேஷ் கார்த்திக் கூற, அது வைரல் ஆகி வருகிறது.