இந்தியாவின் ஆட்டத்தை முடித்த நியூசிலாந்து! வெற்றியை நோக்கி நகரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 170 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ஆம் திகதி துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க, அதன் பின் இரண்டாம் நாளின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து 249 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியது.
இதைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஐந்தாம் நாளைத் தொடர்ந்து இன்று ஆறாம் நாள் ஆட்டத்தில், அதாவது இன்று இரண்டாம் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி சற்று முன் 170 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியது.
Kyle Jamieson gets Virat Kohli in both first innings of this WTC ? pic.twitter.com/aSJ3Vhi6A4
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 20, 2021
ஏற்கனவே 31 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் ஆடி, வெறும் 170 ஓட்டங்களை குவித்ததால், நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 140 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 330 பந்துகள் அதாவது குறைந்த பட்சம் 50 முதல் 55 ஓவர்கள் மீதம் உள்ளது, என்பதால், இந்த ஓட்டத்தை நியூசிலாந்து அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.