தோல்விக்கு பின் கோஹ்லி முதன் முறையாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட புகைப்படம்! விமர்சித்தவர்களுக்கு கொடுத்த பதிலடி
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தோல்விக்கு பின், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இதனால், இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. இவர் தலைமையிலான இந்திய அணி 7 ஐசிசி டிராபிகளில் விளையாடியுள்ளது,
ஆனால் இதுவரை ஒன்றில் கூட வெல்லவில்லை. அதே சமயம், இவரை விட சிறப்பாக கேப்டன்சி செய்யும் வீரர் ரோகித் சர்மா அணியில் இருக்கிறார். அவர் கோஹ்லி இல்லாத பல கட்டங்களில் இந்தியாவுக்கு சிறந்த கேப்டனாக இருந்து வெற்றியை தேடித் தந்துள்ளார்.
This isn’t just a team. It’s a family. We move ahead. TOGETHER ??? pic.twitter.com/E5ATtCGWLo
— Virat Kohli (@imVkohli) June 24, 2021
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருவரும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், சற்று முன் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய டெஸ்ட் அணியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில், இது ஒரு அணி மட்டுமல்ல, அழகான ஒரு குடும்பம். நாங்கள் ஒன்றாக முன்னேறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அந்த புகைப்படங்களுக்கு கீழே கோஹ்லி எதிராகவே ரசிகர்கள் பலர் டுவிட் செய்து வருகின்றனர்.