சுவிஸ் நீர்நிலை ஒன்றில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஏரி ஒன்றில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது.
சுவிஸ் நீர்நிலை ஒன்றில் வெடிகுண்டு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Bains des Pâquis என்னுமிடத்திலுள்ள ஏரிக்கு அருகிலுள்ள நீர்நிலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள், தண்ணீருக்கடியில் வெடிகுண்டு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் அதிகாரிகளுக்கு தகவலளிக்க, அந்த பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், அங்கு செல்ல பொதுமக்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Shell found in lake (c) Kapo GE
சிறிது நேரத்தில் அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பரிசோதிக்க, அது முதல் உலகப்போர்க்கால குண்டு என்பதும், அது வெடிமருந்து இல்லாத வெற்று குண்டு என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் வரலாற்றாளர்கள். காரணம், உலகப்போர்களின்போது வீசப்பட்ட ஆயிரக்கணக்கான குண்டுகள் போருக்குப் பின் ஏரிக்குள்தான் கொட்டப்பட்டன என்கிறார்கள் அவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |