ஜேர்மன் நகரமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு
ஜேர்மன் நகரமொன்றில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்துவந்த சுமார் 6,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு
ஜேர்மனியின் Brandenburg மாகாணத்திலுள்ள Potsdam நகரில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும்போது வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட அமெரிக்க தயாரிப்பான குண்டு ஆகும்.
250 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் சுமார் 6,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அருகிலுள்ள ரயில் நிலையமும் மூடப்பட்டது.
நேற்று அந்த குண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ரயில் சேவையும் மீண்டும் துவங்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆகியும், அப்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் ஜேர்மனியில் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டுவருவது சகஜமான ஒரு விடயமாகிவிட்டது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |