பிரான்ஸ் தலைநகரில் ரயில் பாதையின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ரயில் பாதை ஒன்றின் நடுவே இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையின் நடுவில் வெடிகுண்டு
இன்று, அதிகாலை 4.00 மணியளவில், பாரீஸிலுள்ள Gare du Nord ரயில் நிலையத்தில், பணியாளர்கள் ரயில் பாதையின் நடுவிலுள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது, ரயில் பாதையின் நடுவே, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ℹ️ Retrouvez sur le site les itinéraires de substitution 👇 #RERB https://t.co/5UCSkWNTv5
— RER B (@RERB) March 7, 2025
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
அதனால், நாள் முழுமைக்கும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும், மதியத்துக்கு மேல், சில ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot, அத்தியாவசியமற்ற பயணத்தை ஒத்திவைக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.
பாரீஸுக்கு வடக்கே அமைந்துள்ள Gare du Nord ரயில் நிலையம், நாளொன்றிற்கு 700,000 பயணிகளுக்கு சேவை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |