பிக்பாஸில் கலந்து கொள்ளும் பிரபல WWE வீரர் அண்டர் டேக்கர்?
பிக்பாஸில் பிரபல WWE வீரர் அண்டர் டேக்கர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்தி பிக்பாஸ்
தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தொடர் நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் 19வது தொடர் நாளை தொடங்க உள்ளது. இதில், 15 போட்டியாளர்கள் மற்றும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதில் வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல WWE வீரர் அண்டர் டேக்கர் கலந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் மைக் டைசனும் இணைய உள்ளார் என கூறப்படுகிறது.
அண்டர் டேக்கர்
WWE போட்டிகளில் பிரபல வீரராக வலம் வந்த 60 வயதான அண்டர் டேக்கர், கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு அதில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது, பிக்பாஸில் கலந்து கொள்வது தொடர்பாக அண்டர் டேக்கருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதில் கலந்து கொள்ள அண்டர் டேக்கர் சம்மதித்தால், பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் அதிக ஊதியம் பெறுபவராக மாறுவார். நவம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் தொடரில் WWE வீரர் கலந்து கொள்வது இது முதல்முறை இல்லை. முன்னதாக பிக்பாஸ் 4 வது தொடரில், இந்தியாவை சேர்ந்த WWE வீரர் கிரேட் காளி கலந்து கொண்டார். அவர் ஒரு வாரத்திற்கு ரூ.50 லட்சம் ஊதியம் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |