பாகிஸ்தான் வீரரை உருவ கேலி செய்த நியூசிலாந்து டிஜே.., கொந்தளிக்கும் ரசிகர்கள்
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் வந்த போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நியூசிலாந்து Vs பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜன.17) நடைபெற்ற போட்டியிலும் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
WWE மல்யுத்த வீரரின் என்ட்ரி மியூசிக்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தார். அப்போது, யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது.
Fat Pakistani cricketer welcomed with WWE superstar Big Show’s entrance song…LOL pic.twitter.com/sLUXIHKwKI
— Brutal Truth (@sarkarstix) January 17, 2024
பாகிஸ்தான் வீரர் அசம் கான் உடல் பருமனுடன் இருப்பதால் எடை குறித்த விமர்சனங்களுக்கு உள்ளானவர். இதனால், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அசம் கான் வரும் போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக்கை, நியூசிலாந்து டிஜே போட்டு அவரது உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். மல்யுத்த வீரர் பிக் ஷோ அதிக எடை கொண்ட வீரர் என்ற பெருமையை பெற்றவர். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |