ஜேர்மன் விமான நிலையத்தில் கட்டுமானப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், கட்டுமான பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. அவை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டும் வருகின்றன.
அவ்வகையில், பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமானப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, நேற்று மாலை ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Due to a disposal of WW 2 bomb, flight disruptions may occur @ FRA between 5 and 9 pm.
— Frankfurt Airport (@Airport_FRA) June 7, 2024
Check flight status before traveling to the airport and allow extra time for your journey. We also recommend you check in as early as possible for your flight.
More @ https://t.co/3ZVZvBiOHE pic.twitter.com/Y09A73Yh7u
உடனடியாக, நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள்.
அதனால், விமானங்கள் புறப்பாடு முதலான விடயங்களில் தாமதம் ஏற்படலாம் என எக்ஸில் அறிவித்த விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்துக்கு புறப்படும் முன், அது குறித்து விசாரித்து அறிந்துவிட்டு அதற்கேற்ப விமான நிலையம் வருமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டார்கள்.
பின்னர், நேற்று இரவு, அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து A5 நெடுஞ்சாலையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |