ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: 30,000 மக்கள் வெளியேற்றம்
இரண்டாம் உலகப் போர் காலத்தில் புதைந்த வெடிகுண்டு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
ஜேர்மனியின் போர்சைம்(Pforzheim) நகரில் வெடிக்காமல் மண்ணில் புதைந்திருந்த பிரம்மாண்டமான இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளின் போது இந்த இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத வான்வழி குண்டு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குண்டு பிளாக்பஸ்டர் வகையை சேர்ந்த HC-4000 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மொத்த எடை சுமார் 1.8 டன் எடை கொண்ட இந்த குண்டு, சுமார் 1.35 டன் அளவிலான அதிக ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
30,000 மக்கள் வெளியேற்றம்
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள 30,000 குடிமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்றும், தற்காலிக தங்குமிடங்களில் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலகப் போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகியும் ஜேர்மனியில் இது போன்று வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
இன்னும் பல குண்டுகள் ஜேர்மன் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |