ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் எக்ஸ் தளம்: எலான் மஸ்க் ஆலோசனை
முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் சேவைகளை ஐரோப்பாவில் இருந்து நீக்க அதன் உரிமையாளர் எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ்
உலக அளவில் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதை தொடர்ந்து அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றினார்.
அத்துடன் தொடர்ந்து சமூக வலைதளமான எக்ஸ்-ல் பல புதிய மாற்றங்களை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி வருகிறார்.
ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் எக்ஸ்
இந்நிலையில் க்ஸ் சேவைகளை ஐரோப்பாவில் இருந்து நீக்க அதன் உரிமையாளர் எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து எக்ஸ் தளத்தை ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து அகற்றுவது குறித்து எலான் மஸ்க் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தில், தீங்கான தகவல்கள் பரவுவதை தடுப்பது, பயனர்கள் நடைமுறையை தடை செய்வது, கட்டுப்படுத்துவது, சில தரவுகளை பகிர்வது போன்ற விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |