ட்விட்டர் தலைமை கட்டிடத்தில் நிறுவப்பட்ட லோகோ சில நாட்களில் அகற்றப்பட்டதன் பின்னணி என்ன ?
உலகின் முன்னணி பணக்காரான எலன் மஸ்க் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமூகவலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு அக்டோபரில் வாங்கியிருந்தார் .
உலக பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் தங்கள் அறிக்கைகளையும், தகவல்களையும் முதலில் ட்விட்டர் தளத்தில் பதிவிடுவதால் இது மக்களிடையே பிரபலமாக இருந்துவந்தது.
இந்த தளம் தகவல்கள் போக புகைப்படம், வீடியோ மற்றும் ஸ்பேஸ் எனும் கலந்துரையாடல் வசதியும் கொண்டுள்ளது.
எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே காசு கொடுத்து ப்ளூ டிக் வாங்கிக்கொள்ளும் வசதி, 280 எழுத்துகள் மட்டுமே பதிவிட முடியும் என்பதை 10,000 எழுத்துகள் ஆக்கியது என பல அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் முத்திரையை "x" என மாற்றியிருந்தார். இவரது விண்கலம் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் "ஸ்பேஸ் x" என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த "x" முத்திரையை பிரகாசமாக ஒளிரும் வகையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமையகத்தின் மேல்முகப்பில் நிறுவப்பட்டது. இது சரியாக நிறுவப்படாததால் எந்நேரமும் கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும், இதன் அதீத ஒளியால் அருகில் வசிப்பவர்களுக்கு கண்கள் கூசுவதாகவும் பல புகார்கள் எழுந்தன.
இந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து அந்த முத்திரையை அந்நிறுவனக் கட்டிடத்திலிருந்து அவர்களாகவே அப்புறப்படுத்திவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |