எலான் மஸ்க் நிறுவிய XChat-ல் புதிய X Numbers வசதி
XChat Launches X Numbers for Easy Messaging: XChat செயலியில் X Numbers எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
X Numbers
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான XChat செயலியில், பயனர்களுக்கு எளிதாக செய்தி அனுப்பவும், அழைப்புகளை மேற்கொள்ளவும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு "X Numbers" என்று பெயரிடப்பட்டுள்ளது.

பயன்பாடு
X Numbers என்பது ஒரு தனிப்பட்ட குறியீடு. இதை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை பகிராமல், மற்றவர்களிடமிருந்து செய்தி மற்றும் அழைப்புகளை பெற முடியும்.
இந்த குறியீட்டை, பயனர் விரும்பும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நபர்கள், XChat-இல் நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
பாதுகாப்பான குறியீடு
இந்த வசதி விருப்பத்திற்கேற்ப (optional) செயல்படும். இது XChat-இன் பழைய "message request" முறையை மாற்றாது. மேலும், X Number என்பது தொலைபேசி எண் அல்ல. இது Chat-இல் பாதுகாப்பான குறியீடாக தனித்துவமாக செயல்படும்.
X Number-ஐ இயக்கிய பிறகு, அந்த குறியீட்டை பெற்றிருக்கும் யாரும், பயனர் அவர்களை பின்தொடரவில்லை என்றாலும், நேரடியாக inbox-இல் செய்தி அனுப்ப முடியும். இதனால், message-request பகுதியில் செல்லாமல், நேரடியாக inbox-இல் தகவல் கிடைக்கும்.
இந்த புதிய வசதி, XChat-இல் தொடர்புகளை எளிதாக்குவதோடு, தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |