மோடி தலைமையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு: சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு
இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார்.
மோடி தலைமையிலான உச்சிமாநாடு
சீன தலைநகர் பெயிஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கவுன்சிலின் 25வது கூட்டம் ஜூலை 5ம் திகதி நடைபெற உள்ளது.
இந்தியா கடந்த 2017ம் ஆண்டு நிரந்தர உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், வீடியோ அமைப்பு மூலம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
சீன ஜனாதிபதி பங்கேற்பு
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தலைமையில் காணொலி காரணமாக நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் காணொலி வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதில் முக்கிய கருத்துக்களை தெரிவிப்பார் என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |