Xiaomi 14 Series போன்கள் உலக சந்தைகளில் வரும் 25ம் திகதி அறிமுகம்
முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தனது Xiaomi 14 Series போன்களை இம்மாதம் 25ஆம் திகதி உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro போன்கள் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த இரண்டு போன்களுடன், Xiaomi 14 Ultra மாடல் போனும் உலக சந்தைகளில் வெளியிடப்படும்.
Xiaomi 14 அல்ட்ரா ஃபோன் 6.73-இன்ச் QHD+ AMOLED LTPO டிஸ்ப்ளேவை 120Hz Refresh Rate கொண்டுள்ளது.
Qualcomm Snapdragon 8 Gen 3 SoC சிப்செட் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS பதிப்பில் வேலை செய்கிறது.
ஷாவ்மி 14 அல்ட்ரா ஃபோனில் Leica-backed triple rear camera உள்ளது. 50-megapixel 1-inch primary camera, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50-மெகாபிக்சல் சென்சார் மற்றும் இரண்டு 50-மெகாபிக்சல் சென்சார் கேமராக்கள் உள்ளன.
இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார் கேமராக்கள், ஒன்று 3x மற்றும் மற்றொன்று 5x ஜூம் திறன் கொண்டது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளது.
இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5300mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், Xiaomi 14 Ultra மற்றும் பிற தொடர் போன்களின் விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Xiaomi 14 Ultra, Xiaomi 14 series, Xiaomi 14 series Launch