Xiaomi Alert: பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிறுவனம்
ஷாவ்மி நிறுவனம் தனது பயனர்களுக்கு Display தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Display
Scratch-resistant glass நவீன ஸ்மார்ட்போன்களில் காணப்பட்டாலும் அவை மணல், சாவிகள் அல்லது நாணயங்கள் போன்ற கடினமான பொருட்களால் சேதமடைய வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க பயனர்கள் Screen Protectors-ஐ தெரிவு செய்கின்றனர். குறிப்பாக Liquid UV adhesive screen protectors-ஐ அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், Screen மற்றும் Glass layer இடையே உள்ள வலுவான பிணைப்பு திறனை இந்த protectors உண்டாக்குகின்றன.
இந்த நிலையில், Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், Liquid UV adhesive screen protectors பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதகமான விளைவுகள்
இவை பாதகமான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என ஷாவ்மீ நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. ஏனெனில், இவை சாத்தியமான குறைபாடுகளை கொண்டுள்ளது.
இது ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை சமரசம் செய்து, ஸ்மார்ட்போனிற்கான Warranty-ஐ கெடுக்கிறது. மேலும், இந்த Protectorsயில் பயன்படுத்தப்படும் Liquid Adhesive ஸ்மார்ட்போன்களில் உள்ள Physical keys, Charging port, Speaker holes மற்றும் Battery cover உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் பல்வேறு கூறுகளுக்குள் ஊடுருவும் தன்மையை கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களில் எதிர்பாராத Restarts, Button malfunctions, Speaker disturbances மற்றும் Battery Cover-யின் லெதர் பிரித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படுமாம்.
எனவே இந்த Protectors-ஐ தவிர்க்குமாறு பரிந்துரைத்துள்ள ஷாவ்மீ, Tempered Glass, Non-Temper அல்லது Electrostatic films போன்ற பாதுகாப்பான விருப்பங்களை கருத்தில் கொள்ளுமாறும் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இவற்றின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறனில் எந்தவித சமரசமும், பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |