ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை தொடர்ந்து Xiaomi நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு
ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனம் என்பன திகழ்கின்றன.
தற்போது இந்நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு வரும் கைப்பேசிகளில் அதி உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுடன் விலையும் அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனால் சார்ஜர் மற்றும் ஹெட்போன் என்பவற்றினை தனியாக கொள்வனவு செய்யக்கூடிய வசதியை அறிமுகம் செய்துள்ளன.
இவற்றினை கொள்வனவு செய்யாது தனியாக மொபைல் போனை மாத்திரம் கொள்வனவு செய்யும்போது விலை சற்று குறைவாக இருக்கும் என்பதே காரணமாகும்.
அதேநேரம் ஏற்கணவே உள்ள சார்ஜர் மற்றும் ஹெட்போன் என்பவற்றினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
தற்போது இதேபோன்ற மாற்றத்தினை Xiaomi நிறுவனமும் கொண்டுவரவுள்ளது.
இதனை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Lei Jun உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.