மிக குறைந்த விலையில் அசத்தலான லேப்டாப்... MacBook பக்கம் இனி யாரும் போகமாட்டாங்க
லேப்டாப் பிரிவின் கீழ் சீனாவின் சியோமி நிறுவனம் குறிப்பிடத்தக்க நல்ல பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையின் கீழ் தற்போது சியோமி நிறுவனம் மி நோட்புக் ப்ரோ எக்ஸ் 15 என்ற லேப்டாப்பை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் லேப்டாப் 11 வது ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர் மற்றும் 3.5 கே ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் 11 வது தலைமுறை இன்டெல் கோர் i5-11300H ப்ராசஸர் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது பேஸிக் வேரியண்ட் ஆகும், இதன் விலை 1240 டொலர் ஆகும். இன்டெல் கோர் i7-11370H ப்ராசஸர், 32 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் வரும் ஹை எண்ட் மாடலானது 1,550 டொலர் தொகைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்கள் சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கின்றன. இவைகளின் ஷிப்பிங் வருகிற ஜூலை 9 முதல் தொடங்கும். சியோமி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் 15.6 இன்ச் (3,456 × 2,160 பிக்சல் தீர்மானம்) அளவிலான சாம்சங் இ 4 ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது 261ppi பிக்சல் அடர்த்தி, 600 நிட் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 16:10 என்கிற அளவிலான திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. இது 100 சதவீதம் எஸ்.ஆர்.ஜி.பி மற்றும் டி.சி.ஐ-பி 3 கலர் கேமட்-ஐயும் வழங்கும்.
இந்த லேப்டாப் 11 வது ஜென் இன்டெல் கோர் ஐ 7 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் டிபார்ட்மென்ட் ஆனது, என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 டி சிப் மூலம் கையாளப்படுகிறது.
கூடுதலாக, 32 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 1 டிபி வரை பிசிஐஇ ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, ப்ளூடூத் v.5.2 மற்றும் Wi-Fi 6, 2 x USB-A 3.2 Gen 2 ports, 1 x USB Type-C, Thunderbolt 4, 3.5mm ஹெட்ஜாக் மற்றும் 1 x HDMI 2.1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் இந்த லேப்டாப் 80Whr பேட்டரியை பேக் செய்கிறது, இது 11.5 மணிநேர வீடியோ பிளேபேக்கை ஒரே சார்ஜில் வழங்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய, 130W யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் ப்ரிக் கிடைக்கும்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டி.டி.எஸ் ஆடியோ கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 2 × 2 மைக்ரோஃபோன் அரே, 720p வெப்கேம், முழு அளவு பேக்லிட் கீபோர்ட், உள்ளமைக்கப்பட்ட ஆம்பியண்ட் சென்சார் மற்றும் சரிசெய்யக்கூடிய கீபோர்ட் விளக்குகள் ஆகியவைகளை கூறலாம்.
இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் கொண்டு இயங்குகிறது மற்றும் இது 6-சீரிஸ் அலுமினியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.