உலகின் 2-வது கிங் மேக்கராக மாறிய பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனம்! ஆப்பிளை பின்னுக்கு தள்ளியது: அடுத்து சாம்சங் தான்!
உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட் போன் தாயாரிப்பாளர் என்ற பெருமையை ஷியோமி நிறுவனம் பெற்று, ஆப்பிள்ளை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பிரபல ஸ்மார்ட் நிறுவனாமான Xiaomi சமீபகாலமாக பல ஸ்மார்ட்போன்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. அதில் பல ஸ்மார்ட்போன்கள் மக்களை கவரும் வகையில் உள்ளதால், இதன் தயாரிப்பு விகிதம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், Xiaomi உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிளை பின்னுக்கு தள்ளி, ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹவாய் நிறுவனத்தின் வெளியேற்றத்தின் காரணமாக, Xiaomi இந்த உச்சத்தை எட்டியுள்ளது.
இப்போது இந்த நிறுவனம், முதல் இடத்தில் இருக்கும் சாம்சாங்கிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. Canalys வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், விற்பனையைப் பொறுத்தவரை உலகளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக Xiaomi திகழ்ந்தது.
தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் இன்னும் 19 சதவீத சந்தைப் பங்கில் முதலிடத்தில் உள்ளது, ஆனால் Xiaomi அதே காலகட்டத்தில் 17 சதவீத சந்தையைக் கொண்டிருந்தது.
Xiaomi-யின் ஏற்றுமதி லத்தீன் அமெரிக்காவில் 300 சதவீதத்திற்கும், ஆப்பிரிக்காவில் 150 சதவீதத்திற்கும், மேற்கு ஐரோப்பாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
Xiaomi-யின் நோக்கமே Mi 11 Ultra போன்ற தொலைபேசிகளின் விற்பனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்று Canalys குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் அதே இலக்கைக் கொண்ட மற்ற சீன பிராண்டுகளான Oppo மற்றும் vivo-வின் சவாலை இது எதிர்கொண்டால் மட்டுமே, இந்த நிறுவனம் சாம்சங்கை முந்தி முதல் இடத்தை பிடிக்க முடியும்.
ஆப்பிள் இப்போது 14 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, அதே சமயம் Oppo மற்றும் vivo ஒவ்வொன்றும் 10 சதவீதத்தை மிகப் பெரிய வளர்ச்சியுடன் கொண்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து ஹவாய் நிறுவனம் வெளியேறிய பின்பு, அந்த இடைவெளியை நிரப்ப பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் போராடி வருகின்றன.
சில காலங்களுக்கு முன்பு, ஹவாயால் ஆப்பிளை முந்த முடிந்தது. ஆனால், அதே சமயம் பொருளாதார தடைகள் காரணமாக அந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் தொலைப்பேசி சந்தையில் இருந்து விலகியது.
இதனால் அந்த நிறுவனம் விட்டுச் சென்றுள்ள இடைவெளியை பிடிக்க பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முயன்றாலும், Xiaomi மற்றும் OnePlus இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இப்போது இந்த நிலையில் Xiaomi-யால் அடுத்த சில ஆண்டுகள் தாக்கு பிடிக்க முடியுமா? இல்லை முதல் இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.