இந்திய சந்தையில் அறிமுகமாகும் சியோமி டேப் 6: விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவின் டிஜிட்டல் சந்தையில் சியோமி நிறுவனத்தின் பேட் 6 என்ற டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி பேட் 6
கடந்த 2014ம் ஆண்டு சீன நிறுவனமான சியோமி இந்திய டிஜிட்டல் சந்தையில் களமிறங்கியது, பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வழங்குவதால் இந்தியாவில் இதன் விற்பனை சிறப்பான நிலையில் உள்ளது.
மேலும் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து பல்வேறு டிஜிட்டல் சாதனங்களையும் இந்திய சந்தையில் படிப்படியாக விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
vopmart.com
அந்தவகையில் சியோமி நிறுவனம் தற்போது சியோமி பேட் 6 என்ற டேப்லெட்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த சியோமி டேப் 6 ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு அதன் பேட்டரி நீடிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் கொண்டுள்ளது.
11-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன், 8,840mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் சப்போர்ட் வசதி கொண்டது.
vopmart.com
13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி டேப் 6ன் விலை ரூ.26,999
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி டேப் 6ன் விலை ரூ.28,999
vopmart.com