இந்தியாவில் Xiaomi Pad 7 வெளியீடு: புதிய அம்சங்கள், விலை விவரங்கள்
Xiaomi நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Xiaomi Pad 7 டேப்லெட் மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
முந்தைய Pad 6 மொடலுடன் ஒப்பிடும்போது, இந்த மொடலில் பல மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயனர்களின் உற்பத்தித் திறனையும் மீதமுள்ள பயன்பாடுகளையும் உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட Pad 7, HyperOS 2.0 அடிப்படையிலான Android 15-ஐ இயக்குகிறது.
முக்கிய அம்சங்கள்:
- 11.2 அங்குல 3K LCD திரை: 144Hz ரிஃப்ரெஷ் ரேட், HDR10 மற்றும் Dolby Vision ஆதரவு, 800 நிட்ஸ் பிரகாசம்.
- Qualcomm Snapdragon 7+ Gen 3 சிப்செட்
- அதிகபட்சம் 12GB RAM மெமரி
- 8,850 mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங்
- 13MP பின்புற Camera, 8MP முன்னணி Camera
- AI அம்சங்கள்: Xiaomi Creation, எழுதும் கருவிகள், லைவ் சப்டைட்டில்கள்
விலை மற்றும் கிடைக்கும் திகதி
Xiaomi Pad 7 டேப்லெட் 8GB+128GB வேரியண்ட் ரூ.26,999-க்கும், 12GB+256GB வேரியண்ட் ரூ.29,999-க்கும், Nano-texture திரை கொண்ட 12GB+256GB வேரியண்ட் ரூ.31,999-க்கும் கிடைக்கிறது.
இந்த விலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிப் பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜனவரி 13 முதல் Amazon, Mi.com மற்றும் விற்பனை கடைகளில் கிடைக்கும்.
Focus Keyboard மற்றும் Focus Pen
அதேபோல், Focus Keyboard ரூ. 4,999-க்கும், Focus Pen ரூ. 5,999-க்கும் கிடைக்கும்.
இந்த டேப்லெட் வேலைவாய்ப்புகளுக்கும் பொழுதுபோக்கு தேவைகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |