சியோமி (Xiaomi) போன் வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து! Chrome browser -யை ஹேக் செய்யும் மால்வேர்
சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன் வைத்துள்ள பயனர்களின் சாதனங்களில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிண்டாவ் (Mintnav) என்ற மால்வேர்
சியோமி (Xiaomi) நிறுவனத்தில் வாங்கும் பயனர்களின் ஸ்மார்ட் போன்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து பரவி வருகிறது. அதாவது, இந்த சியோமி ஸ்மார்ட் போன்களில் மிண்டாவ் (Mintnav) என்ற மால்வேர் நிறுவியிருப்பதாகவும், இது குரோம் பிரௌசர் (Chrome browser) ஹேக் செய்யும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஸ்மார்ட் போன்களை இந்த மால்வேர் எப்படி பாதித்தது என்ற செய்தி வெளியாகவில்லை. ரெடிட் (Reddit) என்ற தளத்தில் பயனர் ஒருவர்,"நண்பர்களே, எனது எல்லா சியோமி ஸ்மார்ட் போன்களிலும் உள்ள கூகுள் குரோம் (Google Chrome) இன் முகப்புப் பக்கத்தில் Mintnav என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதை கண்டேன்.
இந்த வார்த்தையை நீங்கள் பார்த்தால் கவனமாக இருங்கள்.இது ஒரு மோசடி என்று நினைக்கிறன். ஆனால், இதை பற்றி எந்த ஆவணமும் எனக்கு தெரியவில்லை. சியோமி போன்களில் இது போன்ற மோசடியை பார்த்துள்ளேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் கவனம் சியோமி பயனர்களை ஈர்த்தது. மேலும், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒருவர் இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.
இதனால் என்ன ஆகும்?
பயிற்சி இணையதளம் (Howtoremove Guide) ஒன்று இந்த மால்வேரைப் பற்றிய தகவலை சேகரித்த போது, மின்டனாவ் (Mintnav) என்பது பிரௌசர் பயன்பாடுகளின் மால்வேர் வகை என்பது தெரியவந்தது. மேலும், இது நேரடியாக தீங்கு விளைவிக்காது.
தினசரி இணைய பயன்பாட்டின் போது, இடையூறையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சியோமி ஸ்மார்ட் போன்களில் இந்த மால்வேர் எப்படி வந்தது என்று இன்னும் தெரியவில்லை. இது சியோமி பயனர்களை கவலையடைய செய்துள்ளது.
மேலும், இது குறித்து சியோமி பயனர்கள் புகாரளிக்கவில்லை. எவ்வாறாயினும், சியோமி நிறுவனமானது இந்த மின்டனாவ் மால்வேருடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சியோமி ஸ்மார்ட்போன்களில் அப்டேட் செய்யப்பட்ட பிறகு இந்த மால்வேர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு, உங்களுடைய ஹோம்பேஜ் என்பதன் கீழ் குரோம் செட்டிங்ஸ் சென்று இதற்கான விருப்பத்தை முடக்கிக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |