Xiaomi-யின் முதல் மின்சார கார் SU7 இந்தியாவில் அறிமுகம்!
சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi இந்தியாவில் தனது முதல் மின்சார கார் SU7-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், SU7 எலக்ட்ரிக் செடான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், Xiaomi தனது 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு செவ்வாயன்று Speed Ultra 7 (SU7) காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த கார் இந்திய சந்தைக்கு வந்தால், இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.50 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நிறுவனம் சீனாவில் மின்சார செடானை 3 வகைகளில் (SU7, SU7 Pro மற்றும் SU7 Max) விற்பனை செய்து வருகிறது.
அதன் ஆரம்ப விலை 215,900 யுவான் அதாவது தோராயமாக ரூ.25 லட்சம்.
இது சீனாவில் டெஸ்லா மாடல் 3-ன் ஆரம்ப விலையை விட 4000 டொலர்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தையில், இது போர்ஸ் 911, BMW i4, BYD Seal மற்றும் Tesla model 3 போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. இந்தியாவில், இது Hyundai Ionic 5 உடன் போட்டியிடும்.
இது Xiaomi-ன் HyperOS இல் இயங்கும் தன்னியக்க ஓட்டுநர் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
28 டிசம்பர் 2023 அன்று சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 'ஸ்ட்ரைட்' என்ற தொழில்நுட்ப வெளியீட்டு நிகழ்வில் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் 28 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 830 கிலோமீட்டர் வரை செல்லும் என்று Xiaomi கூறுகிறது. இது தவிர, இந்த காரில் சென்ட்ரல் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பி-பில்லர் கமெராவில் இருந்து முகத்தை அடையாளம் காணும் அம்சம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Xiaomi's First Electric Car SU7 Revealed In India, Xiaomi SU7