வெறும் 5 நாட்களில் ஒரே நிறுவத்தின் 20 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை! அப்படி என்ன சிறப்பு தெரியுமா?
அமேசான் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதும் பண்டிகை சீசனை முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கும்காலத்தில் ஸ்மார்ட்போன் போன்ற பொருட்களை குறைந்த விலைக்கு வாடிக்கையாளர் வாங்கலாம்.
மேலும் கேஷ்பேக் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்படும். இந்த சலுகைகளை பலர் எதிர்பார்த்து ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். இதன் மூலமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு விற்பனையில் அதிக லாபம் கிடைப்பது வழக்கம்.
இதன் மூலமாக சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிறுவனம் 5 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
பிலிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசன் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆகிய சலுகை திட்டங்கள் மூலம் ஜியோமி ஸ்மார்ட் போன் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஜியோமி நிறுவனம் 10 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளதது.
மேலும் ஜியோமி 11 லைட் NE 5G, Mi 11×சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ரெட்மி நோட் 10s, ரெட்மி நோட் 10 புரோ ரெட்மி 9 சீரிஸ் போன்களும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர்.
ரெட் மி நோட் 10 புரோ போன்களும் 15% தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது. இதுபோன்று தள்ளுபடி அறிவிப்பு ஸ்மார்ட்போன் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சிப் தட்டுப்பாட்டு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி குறைந்திருந்தாலும், பண்டிகை காலம் என்பதால் அதிகளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது