3வது முறையாக சீன அதிபராகப் பதவியேற்கும் ஷி ஜின்பிங்:வரலாறு காணாத நிகழ்வு!
சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங், அந்நாட்டின் ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தில் பதிவுயேற்றுள்ளார்.
வரலாறு காணாத நிகழ்வு
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு வரலாறு சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
கம்யூனிசப் புரட்சியாளர் மாவோ சீனாவை கட்டமைத்த மாபெரும் தலைவராகப் பார்க்கப்பட்டார். அவர் உருவாக்கி வைத்த சோசியலிச அரசியலமைப்பு சட்டங்களே இன்று வரை சீனாவில் நடைமுறையில் உள்ளது.
@getty images
அவரை தொடர்ந்து ஜி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்ட நகர்வு
கொரானா காலத்தில் சீனா சந்தித்த பெரிய அளவிலான பொருளாதார சிக்கல்களிலிருந்தும், உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளிலிருந்தும் சீனாவை மீட்டெடுத்த பெரும் தலைவராக இவர் பார்க்கப்படுகிறார்.
இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜி ஜின்பிங்கிற்கு விசுவாசமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லி கியாங்கும் அடங்குவார்.
@Reuters
அவர் ஜின்பிங்கிற்கு அடுத்து முக்கிய நிர்வாகியாக பணியாற்றுவார் எனத் தெரியவந்துள்ளது. இந்த வாரம் நடைபெறவுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு சீனாவின் அடுத்த கட்ட நகர்வைப் பற்றிய முக்கிய திட்டங்களை வகுக்கும் எனத் தெரியவந்துள்ளது.